ஒளவையரின் ஆத்திச்சூடி!! தகர வருக்கம்!!!

55.தக்கோன் எனத் திரி
56.தானமது விரும்பு
57.திருமாலுக்கு அடிமை செய்
58.தீவினை அகற்று
59.துன்பத்திற்கு இடம் கொடேல்
60.தூக்கி வினை செய்
61.தெய்வம் இகழேல்
62.தேசத்தோடு ஒட்டி வாழ்
63.தையல் சொல் கேளேல்
64.தொன்மை மறவேல்
65.தோற்பன தொடரேல்
                                  -ஒளவையார்

ஒளவையரின் ஆத்திச்சூடி!! சகர வருக்கம்!!!

44.சக்கர நெறி நில்
45.சான்றோர் இனத்து இரு
46.சித்திரம் பேசேல்
47.சீர்மை மறவேல்
48.சுளிக்கச் சொல்லேல்
49.சூது விரும்பேல்
50.செய்வன திருந்த செய்
51.சேரிடம் அறிந்து சேர்
52.சையெனத் திரியேல்
53.சொற் சோர்வு படேல்
54.சோம்பித் திரியேல்
                                    -ஒளவையார்

ஒளவையரின் ஆத்திச்சூடி!! ககர வருக்கம்!!!

32.கடிவது மற
33.காப்பது விரதம்
34.கிழமைப்பட வாழ்
35.கீழ்மை அகற்று
36.குணமது கைவிடேல்
37.கூடிப் பிரியேல்
38.கெடுப்பது ஒழி
39.கேள்வி முயல்
40.கைவினை கரவேல்
41.கொள்ளை விரும்பேல்
42.கோதாட்டு ஒழி
43.கெளவை அகற்று
                                    -ஒளவையார்

சாஸ்திரங்கள் அறிவோம்!!!

எந்தெந்த விரல்களால் விபூதியை இடலாம்?

                 கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது, அங்கே அர்ச்ச‍கர் நமக்கு விபூதியும் குங்கும்மும் அளிப்பார். அப்ப‍டி அளிக்க‍ப் படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும்போது, நாம் அதை எப்ப‍டி, எந்தெந்த‌ விரல்களால் எடுத்து நெற்றியில் இடுகி றோம் என்பதை நம்மில் பலருக்கு தெரிவதில்லை.
               விபூதியை எடுக்க‍ சில‌ விரல்களை பயன் படுத்தும் போதும் தீமையும், சில விரல்க ளை பயன்படுத்தும்போது அதீத நன்மைக ளும் ஏற்படும். ஆகவே விபூதியை எடுக்கும்போது, கீழே குறிப்பி ட்டுள்ள‍ வரிகளில் உள்ள‍ முறைகளை பயன்படுத்தி, மிகவும் கவனமாக எடுத்து அணியவேண்டும்.
கட்டை விரல்:
கட்டை விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் தீராத வியாதி வரும்.
ஆள் காட்டி விரல்:
ஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் – பொருட் கள் நாசம்.
நடுவிரல்:
நடுவிரலால் விபூதியை தொட்டு இட்டுக்கொண்டால் அணிந்தா ல் நிம்மதியின்மை.
மோதிர விரல்:
மோதிர விரலால் விபூதியை தொட்டுக்கொண்டு அணிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை.
சுண்டு விரல்:
சுண்டு விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் கிரகதோஷம் எற்படும்.
மோதிர விரல் – கட்டை விரல்:
மோதிர விரலாலும், கட்டை விரலாலும் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விர லால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே வசப்படம். எடுக்கும் முயற்சி வெற்றி பெரும்......

செய்யக்கூடாத பிற செயல்கள்:

  • நகத்தை பற்களால் கடிக்க கூடாது.
  • மழை பெய்யும் பொழுது ஓடக்கூடாது.
  • தரையில் கை ஊன்றிச் சாப்பிடக்கூடாது.
  • துணி இல்லாமல் குளிக்கக் கூடாது.
  • நெருப்பை வாயினால் ஊதக்கூடாது.
  • செவ்வாய், வெள்ளிக் கிழமைகள், சதுர்த்தி, சதுர்த்தசி, சஷ்டி, பௌர்ணமி, நவமி ஆகிய திதிகளில் முடிவெட்டுதல் கூடாது ஆனால் அந்தத் திதி அமையும் நாள் ஞாயிறு அல்லது வியாழனாயிருந்தால் மேற்படிதிதி தோஷம் இல்லை.
  • அசுத்தமான பொருள்களை நெருப்பில் போடக்கூடாது. அத்துடன் துடிதுடிக்கப் புழுபூச்சிகளை நெருப்பில் போடுவது பிரம்மகத்திதோஷத்தை உண்டாக்கும்.
  • ஆலயத்தில் இரவுநேரத்தில் குளிக்கக்கூடாது. கங்கையில் மட்டும் எந்த நேரமும் குளிக்கலாம். ஈரத்துணியைத் தண்ணீரில் பிழியக்கூடாது, உதறக்கூடாது
  • தண்ணீரிலும்,எண்ணெய்யிலும் நம் நிழலை நாம் பார்க்கக்கூடாது.
  • இருட்டிலோ, நிழல் விழும் இடங்களிலோ அமா்ந்து உண்ணக்கூடாது.வெளிச்சத்தில் அமா்ந்தே உண்ணவேண்டும்.
  • உண்ணும்போது முதலில் இனிப்பையும், முடிவில் கசப்பையும் உண்ணவேண்டும்.
  • ஈர ஆடையுடனும், தலைமுடியை அவிழ்த்துவிட்டும் உண்ணக்கூடாது.
  • நெல்லிக்காய், இஞ்சி, தயிா், வறுத்தமா. இவற்றை இரவில் உண்ணக் கூடாது.
  • உறவினர்களை ஊருக்கு அனுப்பிவிட்டு உடனே எண்ணெய் தேய்த்து நீராடக் கூடாது.
  • கன்றுக்குட்டி,மாடு ஆகியவை கட்டியிருக்கும்கயிற்றை தாண்டக்கூடாது.
  • பெண்கள் கண்ணீா்விடும் வீட்டில் செல்வம் தங்காது. அவா்கள் தலையை விாித்துப்போட்டிருப்பதும், இரு கைகளாலும் தலையை சொறிவதும் வறுமையை உண்டாக்கும்.
  • தன்தாய், தந்தை பிணத்தை தவிர பிறபிணங்களை பிரம்மச்சாாி சுமந்து செல்லக்கூடாது.
  • தன்மனைவி கருவுற்றிருக்கும் காலத்தில் கணவன் அந்நியா் பிணத்தை சுமந்து செல்லக்கூடாது. ஆனால் தன்தாய், தந்தை, பிள்ளையில்லாத சகோதரன், பிள்ளையில்லாத மாமன் ஆகியோாின் பிணத்தை சுமக்கலாம்.
  • தீட்டு உள்ளவா்கள் கட்டிலில் படுக்க கூடாது. தரையில் தான் படுக்க வேண்டும்.
  • மாலைவெயில், ஓமப்புகை, தூயநீா்பருகுதல், இரவில் பாற்சோறு சாப்பிடுதல் என்பன ஆயுளைவிருத்தி செய்யும்.

யார் பணக்காரன்?

பணக்காரன் மகன் செலவாளி
செலவாளி மகன் கடனாளி
கடனாளி மகன் பொறுப்பாளி
பொறுப்பாளி மகன் பணக்காரன்!

இது தான் பணத்தின் சுழற்சி. எதுவும் நிரந்தரமல்ல.

ஒளவையரின் ஆத்திச்சூடி!! உயிர்மெய் வருக்கம்!!!

14.கண்டொன்று சொல்லேல்
15.ங்ப் போல் வளை
16.சனி நீராடு
17.ஞயம்பட உரை
18.இடம்பட வீடு எடேல்
19.இணக்கம் அறிந்து இணங்கு
20.தந்தை தாய்ப் பேண்
21.நன்றி மறவேல்
22.பருவத்தே பயிர் செய்
23.மண் பறித்து உண்ணேல்
24.இயல்பு அலாதன செய்யேல்
25.அரவம் ஆட்டேல்
26.இலவம் பஞ்சில் துயில்
27.வஞ்சகம் பேசேல்
28.அழகு அலாதன செய்யேல்
29.இளமையில் கல்
30.அரனை மறவேல்
31.அனந்தல் ஆடேல்
         -ஒளவையார்                                                     

மாமல்லபுரம்‬ கடற்கரைச் சிற்பங்கள்!



கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா 1984 ல் அறிவித்துள்ளது.


இத்தகைய சிறப்புமிக்க குடைவரைக் கோவில்கள் பல்லவர்களின்
காலத்தில் மன்னன் மகேந்திரவர்மனால் தொடங்கப்பட்டு நரசிம்மவர்மன் முதலான அரசர்களால் படைக்கப்பட்டன.


பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன்பின் உள்நோக்கிக் குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே இந்த வகைக் கோயில்கள். இவற்றின் பின்புறச் சுவரில் கருவறைகளும் அதற்குமுன்பாக அர்த்தமண்டபம், முகமண்டபம் ஆகிய முன்னறைகளும் இருக்கும். கட்டுமானத்தைத் தாங்கும் வகையில் தூண்கள் செதுக்கப்பட்டிருக்கும். இவ்வகைக் கோயில்களில் ஒரு கருவறை அல்லது மூன்று கருவறைகள் அல்லது ஐந்து கருவறைகள்கூட இருக்கலாம். எல்லாக் கோயில்களிலும் கருவறைக்குமுன் அர்த்தமண்டபம் இருக்கும். சிலவற்றில் மட்டுமே முகமண்டபம் என்ற அர்த்தமண்டபத்துக்கும் கருவறைக்கும் இடைப்பட்ட இடம் இருக்கும்.


கருவறைகள் சிவன், திருமால், பிரம்மன், துர்க்கை, சுப்ரமணியன் ஆகிய தெய்வங்களுக்கானவை. இந்தத் தெய்வங்கள் சில கருவறைகளில் சிலைகளாகப் பின் சுவரில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் எல்லாக் கருவறைகளிலும் அப்படி இல்லை. மரத்தில் செதுக்கப்பட்டோ அல்லது துணியில் வரையப்பட்டு மரச்சட்டத்தில் பொருத்தப்பட்டோ உள்ளே வைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் அறிஞர்கள். 

சிவனுக்குரிய கருவறைகளில் லிங்கத்தை நட்டு வைப்பதற்கான குழி காணப்படுகிறது. சில கருவறைகளில் லிங்கமும் உள்ளது. ஒவ்வொரு கருவறைக்கும் வெளியே இரு துவாரபாலகர்கள் எனப்படும் வாயில்காப்பாளர்கள் சிற்பங்களைக் காணலாம். பெண் தெய்வமாக (துர்க்கை) இருக்கும்போது வாயில்காப்பாளர்களும் பெண்களாக இருப்பார்கள்.

மாமல்லபுரத்தில் இருக்கும் இரதங்கள்:
  • பஞ்சபாண்டவ இரதம் எனப்படும் ஐந்து இரதங்கள்
  • வலையன்குட்டை இரதம்
  • பிடாரி இரதங்கள் எனப்படும் இரு இரதங்கள்
  • கணேச இரதம்


இந்த ஐந்து இரதங்களும் பஞ்சபாண்டவர்கள் பெயரைப் பெற்றிருந்தாலும் அவை மகாபாரதத்துடன் தொடர்புடையவை அல்ல. மூன்று அடுக்குகளுடன் எட்டுபட்டை சிகரத்தை (திராவிட விமானம்) உடைய தர்மராச இரதம் மற்றும் அருச்சுன இரதம், சாலை (கூண்டு வண்டி) வடிவிலான சிகரத்தை உடைய பீம இரதம், சதுரமான குடிசை போன்ற சிகரத்தை உடைய திரௌபதி இரதம் மற்றும் கஜபிருஷ்டம் (யானையின் பின்பக்கம்) போன்ற சிகரத்தை உடைய சகாதேவ இரதம் ஆகிய இரதங்கள் கோயில் மாதிரிகளுக்காகத் தோற்றுவிக்கப்பட்டவையே என்பதை அவற்றின் ஸ்தூபிகள் பாறையிலிருந்து பிரிக்கப்பட்டு சிகரத்தின் மீது பொருத்தப்படாமல் இருப்பதிலிருந்து அறியலாம்.

சிற்பக்கலை:
பல்லவர்கள் செதுக்கிய சிற்பங்களில் இருந்து அவர்கள் கலைக்கு அளித்த முக்கியத்துவத்தை நாம் அறியலாம்.


இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத புதுமையாக மாமல்லபுரத்தில் உள்ள வெளிப்புறப் புடைப்புச் சிற்பத் தொகுதிகள் விளங்குகின்றன. வெளிப்புறச் சிற்பத் தொகுதிகளாக இங்கு இருப்பவை:

  • அருச்சுனன் தபசு
  • கண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்குதல் (பிற்காலத்தில் இந்தச் சிற்பத் தொகுதிமீது ஒரு மண்டபம் கட்டப்பட்டது)
  • முற்றுப்பெறாத அருச்சுனன் தபசு
  • விலங்குகள் தொகுதி


இவைதவிர, வராக மண்டபம், ஆதிவராக மண்டபம், மகிஷாசுரமர்த்தினி மண்டபம் ஆகியவற்றுள்ள் சில புடைப்புச் சிற்பத் தொகுதிகள் காணப்படுகின்றன. ராமானுச மண்டபத்தில் உருவாக்கப்பட்ட சில புடைப்புச் சிற்பத் தொகுதிகள் பிற்காலத்தில் மதக் காழ்ப்புணர்ச்சி கொண்டோரால் செதுக்கி அழிக்கப்பட்டிருக்கிறது.

திருவள்ளுவரின் நூல்கள்!!!

நூல்கள்:
1. ஞானவெட்டியான் - 1500
2. திருக்குறள் - 1330
3. ரத்தினசிந்தாமணி - 800
4. பஞ்சரத்தனம் - 500
5. கற்பம் - 300
6. நாதாந்த சாரம் - 100
7. நாதாந்த திறவுகோல - 100
8. வைத்திய சூத்திரம் - 100
9. கற்ப குருநூல் - 50
10. முப்பு சூத்திரம் - 30
11. வாத சூத்திரம் - 16
12. முப்புக்குரு - 11
13. கவுன மணி - 100
14. ஏணி ஏற்றம் - 100
15. குருநூல் - 51

           இவர்கள் அருளிய நூல்கள் இன்னும் பல பெயர் அறியப்படாமல் காலத்தால் அழிந்து விட்டன.

ஒளவையரின் ஆத்திச்சூடி!! உயிர் வருக்கம்!!!

          1. அறம் செய்ய விரும்பு
          2. ஆறுவது சினம்
          3. இயல்வது கரவேல்
          4. ஈவது விலக்கேல்
          5. உடையது விளம்பேல்
          6. ஊக்கமது கைவிடேல்
          7. எண் எழுத்து இகழேல்
          8. ஏற்பது இகழ்ச்சி
          9. ஐயம் இட்டு உண்
          10. ஒப்புரவு ஒழுகு
          11. ஓதுவது ஒழியேல்
          12. ஒளவியம் பேசேல்
          13. அஃகம் சுருக்கேல்
-ஒளவையார்                                           

சூரிய நமஸ்காரத்தின் உன்னதம்!!!

             அதிகாலையில் வெறும் வயிற்றுடன் சூரிய நமஸ்காரம் செய்வது சிறந்தது. உடல் நலம் பெற, இந்த எளிய, ஆயினும் பயனுள்ள, சூரிய வணக்கத் தொகுப்பினைச் செய்யத் துவங்கலாம் வாருங்கள்.
வேதங்களில் ஆரோக்கியமான உடல்நலம் மற்றும் வளமையை உயர்த்துவதற்கு சூரியனை வழிபடும் ஏராளமான மேற்கோள்கள் உள்ளன. இந்த வேதாந்த பாசுர ஏடுகளில் சில (இந்துக்கள் தினசரி செய்யும் வழக்கமான கடமையான) நித்ய விதியுடன் ஒருங்கிணைந்துள்ளது. இந்த தினசரி செயல்பாடுகளானது சூரிய நமஸ்காரம் என வரையறுக்கப்படுகிறது ("சூரிய வணக்கமுறை" எனவும் கூறப்படுகிறது). சூரியனுக்கு உடல்சார் வணக்கமானது கடவுளிடம் முழுமையாக சரணடைவதைக் காட்டுகிறது. இது இந்த செயல்பாடுகளின் முக்கிய பண்பாகும். மண்டலத்திற்கு மண்டலம் இந்த சூரிய நமஸ்காரத்தின் வடிவங்கள் வேறுபடுகின்றன. டுருச்ச கல்ப நமஸ்காரம் மற்றும் ஆதித்ய பிரசனம் இரண்டும் பிரபலமான பயிற்சிகளாகும்.

ஒவ்வொரு சூரிய வணக்கச் சுழற்சியும் இரண்டு தொகுப்புக்களைக் கொண்டது. இந்த 12 யோகா தோற்ற நிலைகளும் சேர்ந்து ஒரு தொகுதியாகின்றன. இரண்டாவது பகுதியினைச் செய்து முடிக்க அதே தோற்ற நிலைகளை மீண்டும் செய்து, (கீழே கொடுக்கப் பட்டுள்ள 4 மற்றும் 9 வது படியில்) வலது காலுக்குப் பதிலாக இடது காலை நகர்த்த வேண்டும். சூரிய நமஸ்காரத்தினைச் செய்வதில் நீங்கள் பல்வேறு காட்சி விளக்கங்களைக் கண்டிருக்கலாம். ஆயினும், ஒரு குறிப்பிட்ட வரிசையைப் பின்பற்றி சீராகப் பயிற்சி செய்தல் சிறந்ததாகும்.
உடல்நலனைப் பெறுவதைத் தவிர, சூரிய நமஸ்கார் இந்தப் பூமியிலுள்ள உயிர்களை வாழவைக்கும் சூரியனுக்கு நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள ஒரு வாய்ப்பும் ஆகும். அடுத்த பத்து நாட்களுக்கு ஒவ்வொரு நாளையும் சூரிய சக்திக்கு கருணை மற்றும் நன்றியுணர்வுடன் துவங்குங்கள். 12 சுற்றுக்கள் சூரிய நமஸ்காரம் செய்து, அதன் பின்,பிற யோகப் பயிற்சிகளைச் செய்து, பின்னர் யோகநித்ராவில் ஆழ்ந்த ஓய்வெடுங்கள். உடல் ஆரோக்கியத்திற்கும், மகிழ்ச்சி மற்றும் அமைதிக்கு இது ஒரு தாரக மந்திரமாக விளங்குவதைக் காண்பீர்கள். இந்த விளைவுகள் நாள் முழுவதும் நீடித்திருப்பதையும் உணர்வீர்கள்.

சூரிய நமஸ்காரம் செய்வது எப்படி?
எதாவது ஒரு விரிப்பின் மீது சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். பின் வருமாறு செய்ய துவங்குங்கள். மேலே உள்ள படத்தை பார்த்து எடுத்துக் காட்டாய் கொள்ளுங்கள். 

1.பிராணமாசனம்(இறைவணக்கம்)

 உங்கள் கால்களை ஒன்றாக வைத்து , இரு பாதங்களும் உங்கள் எடையை சமநிலையில் தாங்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மார்பை விரித்து, உங்கள் தோள்களைத் தளர்த்திக் கொள்ளுங்கள். மூச்சை உள்ளிழுக்கும் போது, இரு கைகளையும் பக்கவாட்டிலிருந்து உயர்த்துங்கள்.மூச்சை வெளிவிடும்போது உள்ளங்கைகள் இரண்டினையும் மார்புக்கேதிரே வணங்கும் நிலையில் எடுத்து வாருங்கள்.

2.அஸ்ட உட்டனாசனம்(உயர்த்தப்பட்ட கைளுடன் தோற்றம்)

மூச்சை உள்ளிழுத்தபடி,மேற் கைகளின் உட்புறத் தசை காதுகளுக்கருகாமையில் இருக்கும்படி இரு கைகளையும் மேலே உயர்த்துங்கள். இந்தத் தோற்றத்தில், பாதங்கள் முதல் கைவிரல்கள் வரையில் உடல் முழுவதையும் மேல்நோக்கி இழுக்கும்வகையில் முயற்சி செய்யப் பட வேண்டும்.இடுப்பை சற்றே முன்புறமாகத் தள்ளிக் கொள்ளலாம்.பின்புறமாக வளைவதை விட, கை விரல்கள் வரையில் மேல்நோக்கி எழும்புவதையே உறுதி செய்து கொள்ளுங்கள்.

3.அஸ்டபாதாசனம்(முன்னோக்கிய நிலையின் குனிந்தவாறு தோற்றம்)

மூச்சை வெளியே விட்ட படி, இடுப்பிலிருந்து மெதுவாகக் குனியுங்கள், முதுகெலும்பு நிமிர்ந்தே இருக்கட்டும்.முழுவதுமாக மூச்சை விட்டபின்னர்,இரு கைகளையும் தரையில் பாதங்களுக்கருகில் கொண்டு வாருங்கள்.
 உள்ளங்கைகளைத் தரையில் வைக்கத் தேவையானால் உங்கள் முட்டிகளை வளைக்கலாம். பிறகு மெதுவாக முயற்சி செய்து,முட்டிகளை நேராக்குங்கள். இந்த வரிசையை முடிக்கும் வரையில் இதே நிலையில் கைகளைத் தரையிலேயே நிலையாக வைத்திருப்பது நல்ல யோசனையாகும்.

4.ஏகபாதபிரஸர்நாசனம் (குதிரைச் சவாரித் தோற்றம்)

மூச்சை உள்ளிழுத்தபடி, உங்களுடைய வலது காலை பின்புறமாகத் முடிந்தவரையில் தள்ளுங்கள். வலது முட்டியை தரையில் ஊன்றி மேலே பாருங்கள்.இடது பாதம் இரு உள்ளங்கைகளுக்கும் இடையே மிகச் சரியாக நிலைகொண்டிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

5.தந்தாசனம்(நான்கு கரங்கள் உள்ள பணியாளர்  தோற்றம்)

மூச்சை உள்ளே இழுக்கும்போதே இடது காலை பின்னோக்கி வைத்து, உடல் முழுவதையும் ஒரு நேர்கோட்டில் கொண்டு வாருங்கள்.உங்கள் கைகளை செங்குத்தாகத் தரையில் வையுங்கள்.

6.அஷ்டாங்க நமஸ்காரா(எட்டு கரங்களுடைய வணக்கம்)

மெதுவாக உங்களது முட்டிகளை தரையில் கொண்டு வந்து மூச்சை வெளியே விடுங்கள். இடுப்பினை சிறிது பின்னால் நகர்த்தி, முன்புறமாகச் சரிந்து, உங்கள் மார்பு,மற்றும் முகவாய் இவற்றைத் தரையில் வையுங்கள். பின்புறத்தைச் சற்றே தூக்குங்கள்.
இடது பாதம் இரு உள்ளங்கைகளுக்கும் இடையே மிகச் சரியாக நிலைகொண்டிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

7.புஜங்காசனம்(நல்ல பாம்புத் தோற்றம்)

முன்னோக்கி நகர்ந்து, மார்பினைச் சற்று உயர்த்துங்கள் உங்களுடைய முழங்கைகளை வளைத்துக் கொள்ளலாம்.தோள்கள் காதுகளிலிருந்து விலகி இருக்கட்டும்.மேலே பாருங்கள்.
மூச்சை உள்ளிழுக்கும்போது மிக மெதுவாக மார்பை முன்னோக்கி தள்ளுங்கள்.மூச்சை வெளிவிடும்போது,தொப்புளை கீழே தள்ளுங்கள்.கால் விரலை அடியில் சேர்த்து விடுங்கள். உங்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு நீட்சி செய்யவும் ; கட்டாயப்படுத்த வேண்டாம்.

8.அதோ முக்கா ஸ்வானாசனம்கீழ்முகம் பார்க்கும் நாய்)

மூச்சை வெளியே விட்டபடியே இடுப்பினையும் முதுகு வால் எலும்பினையும் உயர்த்துங்கள், மார்பு கீழ்நோக்கி, தலை கீழான வடிவத்தில் இத்தோற்றம் இருக்கட்டும்.
முடிந்தால், குதிகால்களை தரையில் பதித்து, முதுகு வால் எலும்பினை மென்மையான முயற்சியின் மூலம் தூக்குங்கள்.

9.ஆஷ்வா சஞ்ச்சலனாசனம் (குதிரையேற்றத் தோற்றம்)

மூச்சை உள்ளிழுத்தபடி, உங்களுடைய வலது காலை முன்புறமாக இரு கைகளுக்கிடையே முடிந்தவரையில் தள்ளுங்கள். இடது முட்டியை தரையில் ஊன்றி மேலே பாருங்கள்.
வலது பாதம் இரு உள்ளங்கைகளுக்கும் இடையே மிகச் சரியாக நிலைகொண்டிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இந்த நிலையில், மெதுவாக இடுப்பினை தரையை நோக்கித் தள்ளுங்கள்.
10.உட்டனாசனம் ( முன்புறம் வளைந்து குனிந்தவாறு போஸ்)
மூச்சை வெளியே விட்ட படி, இடது காலை முன்னாள் எடுத்து வாருங்கள். உள்ளங்கைகள் தரையிலேயே இருக்கட்டும். தேவையானால் முட்டிகளை வளைத்துக் கொள்ளலாம்.

11.அஸ்ட உட்டனாசனம் (கைகள் உயர்த்திய தோற்றம்)

மூச்சை உள்ளிழுத்தபடி,பின்னால் சற்றே வளைத்து, இடுப்பினை வெளிப்புறமாகத் தள்ளியபடியே முதுகினையும் கைகளையும் மேலே உயர்த்துங்கள்.
உங்களது கைகளின் உட்புறத் தசைகள் உங்கள் காதுகளுக்கு அருகில் இருக்கட்டும்.பின்னால் வழிவதை விட மேல்நோக்கி உயர்வதே முக்கியம்.

12.பிராணமாசனம்(இறைவணக்கம்)

மூச்சை வெளியே விடும்போது, உங்கள் உடலை நேராக்கிக் கொள்ளுங்கள். பின்னர், கைகளைக் கீழே விடுங்கள்.இந்த நிலையில் இளைப்பாறுங்கள். உங்கள் உடலில் ஏற்படும் உணர்வுகளைக் கவனியுங்கள்.


சூரிய நமஸ்காரத்தின் அற்புதங்கள்!!!

  1. இதயத்தை முடுக்கிவிட்டு இரத்த ஒட்டத்தை வேகப்படுத்தி உடலின் ஆரோக்கியத்தை நிலைநாட்டுவதில் சூரிய நமஸ்காரம் சிறந்த இடம் பெறுகின்றது. இது இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும். இதயத் துடிப்பைச் சமன் செய்யும். கை, கால் போன்ற தூரவெளி உறுப்புகளுக்குச் சூடு கொடுத்துக் காக்கும்.
  2. சூரிய நமஸ்காரம் ஜீரண மண்டலத்திற்கு உயிரூட்டி ஆற்றலை அளிக்கின்றது. கல்லீரல், வயிறு, மண்ணீரல், குடல்கள் எல்லாம் கசக்கி கசக்கிப் பிடித்து விடுவது போன்று மசாஜ் செய்யப்படுகின்றன.
  3. மலச்சிக்கல் பிரச்சனை சரியாகிவிடுகிறது.
  4. பசியின்மை பறந்தோடுகின்றன.
  5. சூரிய நமஸ்காரத்தில் உடல் அசைவுகளும் மூச்சு ஒட்டமும் இணக்கமாக நடைபெறுகின்றன. நுரையீரல்களில் காற்றோட்டம் தாராளமாகின்றது. இரத்தம் உயிர்க்காற்றால் நலம் பெறுகின்றது. ஏராளமான கரிசக்காற்றையும் பிற நச்சுப் பொருள்களையும் மூச்சு மண்டலத்திலிருந்து வெளியேற்றுவதன் மூலம் சூரிய நமஸ்காரம் உடலுக்குப் பெரும் நன்மை விளைவிக்கின்றது.
  6. சிம்பதட்டிக், பாராசிம்பதட்டிக் நரம்புகளின் செயல்களை நெறிப்படுத்துவதன் மூலம் நல்ல ஒய்வுக்கும் உறக்கத்திற்கும் உதவுகின்றது. இதனால் நினைவாற்றல் அதிகரிக்கின்றது.
  7. பிற உயிரணுக்களைக் காட்டிலும் நரம்பு உயிரணுக்கள் மிக மிக தாமதமாகவே விழிப்புற்று உயிராற்றல் பெறுகின்றன. இருப்பினும் இடையறாத முறையான பயிற்சியாலும் சலிக்காத முயற்சியாலும் சிறுகச் சிறுக நரம்பு உயிரணுக்கள் தத்தம் சாதாரணக் காரியங்களைச் செய்யத்தக்க அளவில் வலுவடைகின்றன.
  8. சூரிய நமஸ்காரத்தில் கழுத்து முன் பின் வளைகின்றது. இதனால் தைராயிட், பாராதைராயிட் சுரப்பிகளுக்கு இரத்தம் கிடைக்கின்றது. அவை செயல்படுவதனால் எல்லா எண்டோக்கிரைன் சுரப்பிகளும் தமக்குரிய இயல்பான காரியங்களைச் செய்கின்றன.
  9. தோல் புத்துணர்வு பெற்றுப் பொலிவடைகின்றது. சூரிய நமஸ்காரத்தை முறைப்படி செய்யும் போது வியர்வை உண்டாகும். ஏராளமாக உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் தோலின் வழியே வெளியேறும். நன்றாக வியர்க்கும் வரை இப்பயிற்சி செய்வது நல்லதென சூரிய நமஸ்காரத்தைப் பிரபலப்படுத்திய அவுண்ட் அரசர் கூறுகின்றார். வியர்வை பத்துப் பதினைந்து நிமிடங்களிலேயே வெளிவருவதை அனுபவத்தில் அறியலாம். தோலின் மூலம் வியர்வை வெளிவரும் அளவுக்கு உடல்நலம் ஓங்கும்.
  10. சூரிய நமஸ்காரத்தில் உடலில் உள்ள தசைகள் அனைத்தும் வலுவடைகின்றன. குறிப்பாக கழுத்து, தோள், கை, மணிக்கட்டு, வயிற்றுச்சுவர், தொடை, கெண்டைக்கால், கணுக்கால் முதலிய பகுதிகளில் தசைகள் பயிற்சியால் உரம் பெறுகின்றன.
  11. கொழுப்பால் வயிறு, தொடை, இடுப்பு, கழுத்து, நாடி முதலிய இடங்களில் உண்டாகும் மடிப்புகள் மறையும்.
  12. தோல், நுரையீரல், குடல், சிறுநீரகம் முதலிய பகுதிகள் வழியே சரியாக மலம் (கழிவுப் பொருட்கள்) வெளியேறுவதால் உடலில் விரும்பத் தகாத துர்நாற்றம் ஏற்படுவதில்லை.
  13. சூரிய நமஸ்காரத்தில் உடல் சரியான அளவில் அமையப் பெறுவதால் அது எந்த விளையாட்டுப் பயிற்சி வேலைகளுக்கும் எப்போதும் தயார் நிலையில் இருக்கும். இளமை, நலம், அழகு மூன்றும் ஒருங்கே அமைந்து உடலுக்கும் உயிருக்கும் அழியா இன்பத்தைக் கொடுக்க வல்லது.

காக்கைச் சிறகினிலே!!

“காக்கைச் சிறகினிலே நந்த லாலா!-நின்தன்
கரியநிறந் தோன்று தையே நந்த லாலா!

பார்க்கும் மரங்க ளெல்லாம் நந்த லாலா!-நின்தன்
பச்சை நிறந் தோன்று தையே நந்த லாலா!
கேட்கு மொலியி லெல்லாம் நந்த லாலா!-நின்தன்
கீத மிசக்குதடா நந்த லாலா!
தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா!-நின்னைத்
தீண்டு மின்பந் தோன்று தடா நந்த லாலா!” 
-பாரதியார்

காற்று!!!


ஒரு வீட்டு மேடையிலே ஒரு பந்தல். ஓலைப் பந்தல் 
    தென்னோலை. 

குறுக்கும் நெடுக்குமாக ஏழட்டு மூங்கிற் கழிகளைச் 
    சாதா ரணக் கயிற்றால் கட்டி மேலே தென்னங
    கிடுகுகளை விரித் திருக்கிறது. 
ஒரு மூங்கிற் கழியிலே கொஞ்சம் மிச்சக்கயிறு 
     தொங்குகிறது. 
ஒரு சாண்கயிறு.
இந்தக் கயிறு, ஒருநாள் சுகமாக ஊசலாடிக் கொண்டிருந்தது.
பார்த்தால் துளிகூடக் கவலை இருப்பதாகத் தெரியவில்லை.
சில சமயங்களில் அசையாமல் ‘உம்’ மென்றிருக்கும். 
கூப்பிட்டாற்கூட ஏனென்று கேட்காது. 
இன்று அப்படியில்லை. ‘குஷால்’ வழியிலிருந்தது. 
எனக்கும் இந்தக் கயிற்றுக்கும் சிநேகம். நாங்கள் 
     அடிக்கடி வார்த்தைசொல்லிக்கொள்வதுண்டு.
“கயிற்றினிடத்தில் பேசினால், அது மறுமொழி சொல்லுமா?”
பேசிப்பார், மறுமொழி கிடைக்கிறதா இல்லையா என்பதை.
ஆனால் அது சந்தோஷமாக இருக்கும் சமயம் பார்த்து 
     வார்த்தை சொல்லவேண்டும். இல்லாவிட்டால், 
     முகத்தைத் தூக்கிகொண்டு சும்மா இருந்துவிடும், 
     பெண்களைப்போல.
எது எப்படியிருந்தாலும், இந்தவீட்டுக் கயிறு பேசும். 
    அதில் சந்தேகமே யில்லை. 
ஒரு கயிறா சொன்னேன்? இரண்டு கயிறு உண்டு. 
ஒன்று ஒரு சாண். மற்றொன்று முக்கால் சாண்.
ஒன்று ஆண்; மற்றொன்று பெண்; கணவனும், மனைவியும்.
அவை யிரண்டும் ஒன்றையொன்று காமப்பார்வைகள் 
     பார்த்துக்கொண்டும், புன்சிரிப்புச் சிரித்துக்
     கொண்டும், வேடிக்கைபேச்சுப் பேசிக்கொண்டும் 
    ரசப்போக்கிலேயிருந்தன. 
அத்தருணத்திலே நான் போய்ச்சேர்ந்தேன்.
ஆண் கயிற்றுக்குக் ‘கந்தன்’ என்று பெயர்.
பெண் கயிற்றுக்குப் பெயர் ‘வள்ளியம்மை’.
(மனிதர்களைப் போலவே துண்டுக் கயிறுகளுக்கும் பெயர் 
     வைக்கலாம்.)
கந்தன் வள்ளியம்மைமீது கையைப்போட வருகிறது. வள்ளி
    யம்மை சிறிது பின்வாங்குகிறது. அந்த சந்தர்ப்
    பத்திலே நான் போய்ச்சேர்ந்தேன்.
“என்ன, கந்தா, சௌக்கியந்தானா? ஒரு வேளை, நான் 
    சந்தர்ப்பந் தவறி வந்துவிட்டேனோ, என்னவோ? 
    போய், மற்றொருமுறை வரலாமா?” என்று கேட்டேன்.
அதற்குக் கந்தன்: -- “அட போடா, வைதிக மனுஷன்! 
    உன் முன்னேகூட லஜ்ஜையா? என்னடி, வள்ளி, நமது 
    சல்லாபத்தை ஐயர் பார்த்ததிலே உனக்குக் கோபமா?”
    என்றது.
“சரி, சரி, என்னிடத்தில் ஒன்றும் கேட்கவேண்டாம்” 
     என்றது வள்ளியம்மை.
அதற்குக் கந்தன், கடகடவென்று சிரித்துக் கைதட்டிக் 
    குதித்து, நான் பக்கத்திலிருக்கும்போதே வள்ளி
    யம்மையைக் கட்டிக்கொண்டது.
வள்ளியம்மை கீச்சுக்கீச்சென்று கத்தலாயிற்று. 
    ஆனால், மனதுக்குள்ளே வள்ளியம்மைக்கு 
    சந்தோஷம். நாம் சுகப்படுவதைப் பிறர் பார்ப்பதிலே 
    நமக்கு சந்தோஷந் தானே?
இந்த வேடிக்கை பார்ப்பதிலே எனக்கும் மிகவும் திருப்தி 
    தான், உள்ளதைச்
சொல்லிவிடுவதிலே என்ன 
    குற்றம்? இளமையின் சல்லாபம் கண்ணுக்குப் 
    பெரியதோர் இன்பமன்றோ? 
வள்ளியம்மை அதிகக் கூச்சலிடவே, கந்தன் அதை
    விட்டு விட்டது. 
சில க்ஷணங்களுக்குப்பின் மறுபடிபோய்த் தழுவிக்
     கொண்டது. 
மறுபடியும் கூச்சல், மறுபடியும் விடுதல்; மறுபடியும் 
    தழுவல், மறுபடியும் கூச்சல்; இப்படியாக நடந்து
    கொண்டே வந்தது.
“என்ன, கந்தா, வந்தவனிடத்தில் ஒரு வார்தைகூடச் 
     சொல்ல மாட்டேனென்கிறாயே? வேறொரு சமயம் 
     வருகிறேன், போகட்டுமா?” என்றேன்.
“அட போடா! வைதிகம்! வேடிக்கைதானே பார்த்துக் 
    கொண்டிருக்கிறாய். இன்னும் சிறிதுநேரம் நின்று 
    கொண்டிரு. இவளிடம் சில வ்யவஹாரங்கள் தீர்க்க
    வேண்டியிருக்கிறது. தீர்ந்தவுடன் நீயும் நானும் சில 
    விஷயங்கள் பேசலாம் என்றிருக்கிறேன். போய் 
    விடாதே, இரு” என்றது.
நின்று மேன்மேலும் பார்த்துக்கொண்டிருந்தேன்.
சிறிதுநேரம் கழிந்தவுடன், பெண்ணும் இன்ப 
    மயக்கத்திலே நான் நிற்பதை மறந்து நாணத்தை 
    விட்டுவிட்டது.
உடனே பாட்டு. நேர்த்தியான துக்கடாக்கள். ஒரு வரிக்கு 
     ஒரு வர்ணமெட்டு.
இரண்டே ‘சங்கதி’. பின்பு மற்றொரு பாட்டு.
கந்தன் பாடிமுடிந்தவுடன், வள்ளி. இது முடிந்தவுடன், 
    அது. மாற்றி மாற்றிப் பாடி -- கோலாஹலம்!
சற்றுநேரம் ஒன்றையொன்று தொடாமல் விலகிநின்று 
    பாடிக்கொண்டே யிருக்கும். அப்போது வள்ளியம்மை 
    தானாகவேபோய்க் கந்தனைத் தீண்டும்.
அது தழுவிக்கொள்ளவரும். இது ஓடும். கோலாஹலம்!
இங்ஙனம் நெடும்பொழுது சென்றபின் வள்ளியம்மைக்குக் 
     களியேறி விட்டது.
நான் பக்கத்து வீட்டிலே தாகத்துக்கு ஜலம் குடித்துவிட்டு
     வரப் போனேன்.
நான் போவதை அவ்விரண்டு கயிறுகளும் கவனிக்கவில்லை.
நான் திரும்பிவந்து பார்க்கும்போது வள்ளியம்மை தூங்கிக் 
கந்தன் என் வரவை எதிர்நோக்கி யிருந்தது.
என்னைக் கண்டவுடன், “எங்கடா போயிருந்தாய், 
    வைதிகம்! சொல்லிக் கொள்ளாமல் போய
    விட்டாயே” என்றது.
“அம்மா நல்ல நித்திரைபோலிருக்கிறதே?” என்று 
     கேட்டேன்.
ஆஹா! அந்த க்ஷணத்திலே கயிற்றிலிருந்து வெடித்து 
    வெளிப்பட்டு என்முன்னே நின்ற தேவனுடைய 
    மஹிமையை என்னென்று சொல்வேன்!
காற்றுத் தேவன் தோன்றினான்.
அவனுடல் விம்மி விசாலமாக இருக்குமென்று 
     நினைத்திருந்தேன்.
வயிர ஊசிபோல் ஒளிவடிவமாக இருந்தது.
    “நமஸ்தே வாயோ, த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி.”
    காற்றே, போற்றி. நீயே கண்கண்ட பிரமம்.
அவன் தோன்றியபொழுதிலே வானமுழுதும் 
ப்ராணசக்தி நிரம்பிக் கனல்வீசிக்கொண்டிருந்தது.
ஆயிரமுறை அஞ்சலிசெய்து வணங்கினேன்.
காற்றுத்தேவன் சொல்வதாயினன்: -- “மகனே, ஏதடா
     கேட்டாய்? அந்தச் சிறிய கயிறு உறங்குகிறதா என்று 
     கேட்கிறாயா? இல்லை. அது செத்துப்போய்
     விட்டது. நான் ப்ராணசக்தி. என்னுடனே உறவு
     கொண்ட உடல் இயங்கும். என்னுற வில்லாதது சவம். 
     நான் ப்ராணன். என்னாலேதான் அச்சிறு கயிறு 
     உயிர்த்திருந்தது’; சுகம்பெற்றது. சிறிது களைப்பெய்திய
     வுடனே அதை உறங்க -- இறக்க -- விட்டு விட்டேன். 
     துயிலும் சாவுதான். சாவும் துயிலே. நான் விளங்கு
     மிடத்தே அவ்விரண்டும் இல்லை. மாலையில் வந்து 
     ஊதுவேன். அது மறுபடி பிழைத்துவிடும். 
நான் விழிக்கச்செய்கிறேன். அசையச்செய்கிறேன். நான் 
    சக்திகுமாரன், என்னை வணங்கி வாழ்க” என்றான்.
“நமஸ்தே வாயோ, த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி.
த்வாமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம வதிஷ்யாமி.”
-பாரதியார்

மழை!!


மழை
வெட்டி யடிக்குது மின்னல், கடல்
வீரத்திரை கொண்டு விண்ணை யிடிக்குது;
கொட்டி யிடிக்குது மேகம்; கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று; 

சட்டச்சட சட்டச்சட டட்டா என்று 
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்; 
எட்டுத் திசையும் இடிய மழை 
எங்ஙனம் வந்ததடா, தம்பி வீரா!
-பாரதியார்

உடல் உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து உடலில் உள்ள நோய்களை எப்படி தெரிந்துகொள்வது ?

கண்கள் உப்பியிருந்தால்..

சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.
குறிப்பு: உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.
கண் இமைகளில் வலித்தால்..
அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.
குறிப்பு: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம்..
அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த மன அழுத்தத்தினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.
குறிப்பு: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்..
கண்கள் உலர்ந்து போவது..
நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.
குறிப்பு: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.
தோலில் தடிப்புகள் ஏற்படுதல்..
இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.
குறிப்பு: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.